ஷங்கரைக் கவர்ந்த ‘கத்தி, மெட்ராஸ்’ பாடல்கள்…

director shankar newsஇயக்குனர் ஷங்கர் அவ்வப்போது புதுப் புது திறமைசாலிகளையும் பாராட்டி வருகிறார். இதற்கு முன் ‘ஜிகர்தண்டா’ படத்தைப் பற்றி  பாராட்டி அவருடைய சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்திருந்தார்.

தற்போது “கத்தி மற்றும் மெட்ராஸ்” படப் பாடல்கள் குறித்து பாராட்டி எழுதியுள்ளார். ‘கத்தி’ படத்திற்கு அனிருத்தும், ‘மெட்ராஸ்’ படத்திற்கு சந்தோஷ் நாராயணனும் இசையமைத்துள்ளனர்.

‘‘கத்தி’  படத்தில் இடம் பெற்றுள்ள ‘பக்கம் வந்து…’ பாடலை தினமும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அந்தப் பாடல் அழகாக அமைந்துள்ளது. ‘மெட்ராஸ்’ படத்தில் இடம் பெற்றுள்ள “நான் நீ…. மற்றும் ‘சென்னை…வாடா…சென்னை’ பாடல்களும்” ஃபிரஷ் ஆகவும் இனிமையாகவும் அமைந்துள்ளன,” என இயக்குனர் ஷங்கர் குறிப்பிட்டிருக்கிறார்.

ஷங்கர் அடுத்து இயக்கும் படத்திலோ, அல்லது தயாரிக்கும் படங்களிலோ இவர்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை….

Read Previous

காயம் எதுவும் இல்லை – கமல்ஹாசன்…

Read Next

‘மூவி ஃபண்டிங்’ – தமிழ் சினிமாவில் ஒரு புதிய முயற்சி…

Most Popular