சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் ஹிப்ஹாப் தமிழா

ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் படத்தின் இசையமைப்பாளராக ஹிப்ஹாப் தமிழா ஆதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு படத்திற்கு ஆதி இசையமைப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இது பற்றி படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறியதாவது,

“இன்றைய இளைஞர்களின் ரசனை அறிந்த இசையமைப்பாளராக இருக்க வேண்டும் என நினைத்தோம். இசையமைப்பாளராக, நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் ஆதி இந்தப் படத்திற்காக நேரம் ஒதுக்க முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. கதையைக் கேட்டதும் அவர் உடனே சம்மதம் தெரிவித்தார்.

சிவகார்த்திகேயன், நயன்தாரா ஜோடிக்கு குடும்பத்தோடு வந்து படம் பார்க்கும் ரசிகர்கள் ஆதரவு அதிகம். எல்லா விதமான ரசிகர்களையும் தன் படம் மூலம் கவர்ந்துள்ள இயக்குனர் ராஜேஷ் இந்தப் படத்தை இயக்குவது ஒரு தயாரிப்பாளராக எனக்கு இரட்டை மகிழ்ச்சி. மக்களுக்குப் பிடித்தமான ஒரு படமாக இந்தப் படம் இருக்கும் என உறுதியாகக் கூற முடியும்,” என்கிறார் ஞானவேல் ராஜா.

படவேலைக்கான தலைப்பாக தற்போதைக்கு ‘எஸ்கே 13’ என அழைக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Read Previous

‘பியார் பிரேமா காதல்’, பணக்காரப் பெண்ணைக் காதலிக்கும் அப்பாவி

Read Next

60 வயது மாநிறம், பெருமை கொள்ளும் படைப்பு

Most Popular