‘பியார் பிரேமா காதல்’, பணக்காரப் பெண்ணைக் காதலிக்கும் அப்பாவி

ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் சார்பாக யுவன்ஷங்கர் ராஜா, இர்பான் மாலிக், கே புரொடக்ஷன்ஸ் சார்பாக ராஜராஜன் இணைந்து தயாரிக்கும் படம் ‘பியார் பிரேமா காதல்’.

‘சிந்து சமவெளி, பொறியாளன், வில் அம்பு’ ஆகிய படங்களில் நாயகனாக நடித்த, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் சீசன் 1-ல் பங்கேற்ற ஹரிஷ் கல்யாண் இந்தப் படத்தில் நாயகனாக நடிக்கிறார். ’பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரைசா வில்சன் நாயகியாக அறிமுகமாகிறார்.

படம் பற்றி ஹரிஷ் கல்யாண் கூறியதாவது,

“காதலை அடிப்படையாகக் கொண்ட ஒரு திரைப்படம் வியாபர ரீதியாக ஒரு ஆர்வத்தை உருவாக்கி நீண்ட காலம் ஆகிறது. இத்தகைய எதிர்பார்ப்புகளுக்கு முக்கிய காரணம் யுவன் ஷங்கர் ராஜா என்ற ஒரு மந்திரக்கோல், அவருக்கு நன்றி.

எல்லோரும் படத்தில் என்னுடைய ஆடைகள் பல்வேறு விதமாக இருப்பதை கவனித்திருப்பார்கள். ஒரு பக்கம் லுங்கி மற்றொரு பக்கம் மாடர்ன் ட்ரெஸ். ஒரு அப்பாவி நடுத்தர வர்க்க பையன், உயர்தர வர்க்கப் பெண்ணைக் காதலிக்க, ஒரு ஸ்டைலான பணக்கார பையனாக தன்னைக் காட்டிக் கொள்ளும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். ‘பியார் பிரேமா காதல்’ முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த ஒரு காதல் படமாகும்,” என்கிறார்.

‘பியார் பிரேமா காதல்’ ஆகஸ்ட் 9ம் தேதி வெளியாகிறது.

Read Previous

இயற்கை அழிப்புக்கு எதிராகக் குரல் கொடுக்கும் ‘மரகதக்காடு’

Read Next

சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் ஹிப்ஹாப் தமிழா

Most Popular