கமர கட்டு – சுவையான கல்லூரி காதல் கதை…

kamarkattu team_00018பார்த்திபன் இயக்கிய ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தைத் தயாரித்த ரீவ்ஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் ஸ்ரீ தக்ஷா இன்னவேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் படம் ‘கமர கட்டு’.

ராம்கி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் ஃபைசல் இசையமைப்பில் யுவன், ‘பசங்க’ ஸ்ரீராம், மனிஷாஜித், டெல்லா மற்றும் பலர் நடிக்கும் படம்.

இப்படம் ஒரு கல்லூரி காதல் கதையாக உருவாகி வருகிறது. கதையின் மீது நம்பிக்கை வைத்து வளர்ந்து வரும் நட்சத்திரங்களை வைத்து இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் ராம்கி. படம் பற்றி அவர் கூறியதாவது,

“இப்படத்தின் புகைப்படங்களில் நாயகர்களும், நாயகிகளும் பள்ளி சீருடையில் இருந்தாலும் பள்ளிப் பருவக் காதலை படத்தில் சொல்லவில்லை. அவர்கள் கல்லூரிக்கு வந்த பிறகுதான் காதலை நுழைத்துள்ளேன்.

‘கமர கட்டு’ங்கறது இனிப்பான நம்ம கிராமத்துப் பக்கம் கிடக்கிற ஸ்வீட். ஆனால், அதைப் பார்த்து கடிச்சி சாப்பிடணும், இல்லைன்னா பல்லையே பதம் பார்த்துடும். அப்படித்தான் இந்தப் படத்துலயும் ஒரு அழுத்தமான விஷயத்தை வச்சிருக்கேன்.

படத்துல காதல், ஆக்ஷன், சென்டிமென்ட் இப்படி வழக்கமான கமர்ஷியல் விஷயங்கள் எல்லாம் இருக்கு. கூடவே, ஆன்மீகத்தையும் கலந்து கொடுத்திருக்கேன்.

இந்தப் படத்துக்காக திருவண்ணாமலை பக்கத்துல ஒரு மலை மேல ஹெலிகேம் எடுத்துக்கிட்டு போய் படம் பிடிக்க நின்னோம். ஆனால், அங்க இருக்கிற ஆஞ்சநேயர்  கோயிலை சுத்தி ஹெலிகேமை பயன்படுத்தலாம்னு பார்த்தால் சில மீட்டர் தூரம் ஹெலிகேம் வேலை செய்யவேயில்லை. அந்த அளவுக்கு அந்த இடத்துல வைப்ரேஷன் இருந்துச்சி. அப்புறம் அங்க ஷுட் பண்ணாமலே திரும்ப வந்தோம்,” என்ற ஆச்சரியத் தகவலையும் அளிக்கிறார் இயக்குனர் ராம்கி ராமகிருஷ்ணன்.

Read Previous

ரஜினிகாந்த் அரசியலில் நுழைவாரா…? திடீர் பரபரப்பு…

Read Next

சூர்யா பெயரில் போலி ‘ஃபேஸ் புக்’ பக்கம்…