சூர்யா பெயரில் போலி ‘ஃபேஸ் புக்’ பக்கம்…

suriya facebook pageநடிகர் சூர்யா பெயரில் ஒரு போலி ‘ஃபேஸ் புக்’ பக்கம் சில மணி நேரங்களுக்கு முன் யாரோ ஒரு சிலரால் உருவாக்கப்பட்டது.

அந்த பக்கம் ஆரம்பிக்கப்பட்ட நான்கைந்து மணி நேரங்களில் 6500க்கும் மேற்பட்டோர் அந்த பக்கத்தை தொடர ஆரம்பித்தனர்.

ஆரம்பமான சில மணி நேரங்களுக்குள் அடிக்கடி புரொஃபைல் படத்தை மாற்றிக் கொண்டேயிருந்தனர்.

அந்த பக்கத்தைப் பற்றி தெரிய வந்ததும், சூர்யாவின் அதிகாரப்பூர்வமான ரசிகர் மன்றத்தினர் சைபர் கிரைமில் அது பற்றி புகார் செய்தனர்.

அதைத் தொடர்ந்து சூர்யாவின் மக்கள் தொடர்பளாரும் அந்த போலியான ஃபேஸ்புக் பக்கம் பற்றிய செய்தி ஒன்றையும் அனுப்பியிருந்தார்.

அது கிடைத்த சில நொடிகளுக்குள் நாமும் அந்தப் பக்கத்தைச் சென்றுப் பார்த்தோம், ஆனால், அதற்குள் அந்தக் குறிப்பிட்ட போலி பக்கம் உடனடியாக நீக்கப்பட்டுவிட்டது.

Read Previous

கமர கட்டு – சுவையான கல்லூரி காதல் கதை…

Read Next

த்ரிஷா என்னுடைய தோழி – ராணா