த்ரிஷா என்னுடைய தோழி – ராணா

trisha and rana daggubatiதமிழ், தெலுங்குத் திரையுலகில் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகையாக இருந்து வரும் த்ரிஷாவுக்கும், திரைப்படத் தயாரிப்பாளரும், தொழிலதிபருமான வருண் மணியனுக்கும் நாளை சென்னையில் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது.

கடந்த சில வருடங்களாக த்ரிஷாவுக்கும், தெலுங்கு நடிகரான ராணா டகுபதிக்கும் இடையே காதல் என பத்திரிகைகள் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வந்தன. அதற்கு சம்பந்தட்ட இருவருமே மறுப்பு தெரிவித்தாலும், பத்திரிகைகள் அதை விடுவதாக இல்லை.

அவர்களிருவரும் ஜோடியாக பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதும் பத்திரிகைகளிடம் சந்தேகத்தை எழுப்பின. சில வாரங்களுக்கு முன்னர்தான் த்ரிஷா அவருடைய காதல் யாருடன் என்பதைப் பற்றி வெளிப்படையாக அறிவித்தார். அத்துடன் அவருக்கும் ராணவுக்குமான  காதல் வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி விழுந்தது.

இதனிடையே ராணா டகுபதி அவர் நடித்து வெளிவர உள்ள ஹிந்திப் படமான ‘பேபி’ படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக ஊர் ஊராக சுற்றி வருகிறார். அப்போது அவரிடம் த்ரிஷாவுடனான காதல் முறிவைப் பற்றி நிருபர்கள் கேட்டதற்கு,

“நானும் த்ரிஷாவும் நல்ல நண்பர்கள்தான், அவர் எனக்குத் தோழி மட்டுமே. எங்கள் இருவருக்குமிடையே காதல் இல்லை என பல முறை சொல்லியும் யாரும் அதைக் கண்டு கொள்ளவில்லை. சமீபத்தில் கூட கோவாவில் நான், த்ரிஷா, வருண் மணியன் ஆகியோர் ‘பார்ட்டி’ வைத்து கொண்டாடினோம்,” என்று பதிலளித்துள்ளார்.

Read Previous

சூர்யா பெயரில் போலி ‘ஃபேஸ் புக்’ பக்கம்…

Read Next

‘ஐ, லிங்கா, கத்தி’ – வசூல் ஒப்பீடு…