‘ஐ, லிங்கா, கத்தி’ – வசூல் ஒப்பீடு…

i-kaththi-lingaa-collection

பொங்கலுக்குத் திரைக்கு வந்த ‘ஐ’ திரைப்படம் கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் நல்ல வசூலைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

விடுமுறை முடிந்த பின் வசூல் ஓரளவுக்குத்தான் குறைந்துள்ளது என்றும் மீண்டும் வார விடுமுறை நாட்களில் வசூல் அதிகமாக இருக்கும் என்றும் திரையரங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் வெளிவந்த ‘லிங்கா’ திரைப்படம் வாங்கிய வினியோகஸ்தர்களுக்கு லாபத்தைத் தராமல் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக பிரச்சனை எழுந்துள்ளது.

அதையடுத்து பாதிக்கப்பட்ட வினியோகஸ்தர்கள் சார்பாக வெளியிடப்பட்ட ஒரு வசூல் நிலவரம் நமக்குக் கிடைத்தது. அதில் ‘கத்தி, லிங்கா, ஐ’ ஆகிய படங்களை அடுத்தடுத்து சில திரையரங்குகளில் வெளியிட்டு அவர்கள் லாபமடைந்தார்களா, நஷ்டமடைந்தார்களா என்பதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்கள்.

ஒரு படத்தை தியேட்டரில் வாங்கி வெளியிடுவதற்கு முன் அதற்கு ஒரு வைப்புத் தொகை கொடுக்க வேண்டும். அந்த வைப்புத் தொகை ஒரு வாரத்தில் வசூலாகி, இரண்டாவது வாரத்தில் வினியோகஸ்தர் செலுத்தி மொத்தத் தொகையும் வசூலாகி, மூன்றாவது வாரத்தில் படம் லாபத்தை ஈட்ட வேண்டும். இதுதான் ஒரு படம் வெற்றி பெறுவதற்கான கணக்கு.

ஆனால், ‘லிங்கா’ விவகாரத்தில் அப்படி நடக்கவில்லை என்கிறார்கள்.

உதாரணத்திற்கு, பட்டுக்கோட்டையில் உள்ள அன்னபூர்ணா திரையரங்கில் ‘கத்தி’ திரைப்படத்திற்காக கொடுக்கப்பட்ட வைப்புத் தொகை 10 லட்ச ரூபாய்.  5 நாட்களில் ‘கத்தி’ படம் வசூலித்தத் தொகை 10.7 லட்சம்.

‘லிங்கா’ திரைப்படத்திற்காக கொடுக்கப்பட்ட வைப்புத் தொகை 15 லட்சம், ஆனால் 5 நாட்களில் வசூலான தொகை 4.51 லட்சம் மட்டுமே.

‘ஐ’ படத்திற்காக கொடுக்கப்பட்ட வைப்புத் தொகை 15 லட்சம், ஐந்து நாட்களில் வசூலான தொகை 14.92 லட்சம்.

அதற்குப் பிறகு வசூலாகும் தொகை வினியோகஸ்தர் பங்கு போக, தியேட்டர்காரர்களுக்கு லாபக் கணக்கில் சேரும். ஆனால், ‘லிங்கா’ விவகாரத்தில் அப்படி நடக்கவில்லை என்பதுதான் வினியோகஸ்தர்களின் குற்றச்சாட்டு.

Read Previous

த்ரிஷா என்னுடைய தோழி – ராணா

Read Next

பிப்ரவரி 6-ல் ‘வஜ்ரம்’ வெளியீடு…