நண்பன கூப்பிட்டுப் பாரு, உயிரையே கொடுப்பான் பாரு…

nanbargal narpani mandram newsஸ்ரீ அண்ணாமலையார் மூவீஸ் என்ற பட நிறுவனம் சரர்பாக சி.மாதையன் தயாரிக்கும் படம் ‘நண்பர்கள் நற்பணி மன்றம்’.

இந்தப் படத்தில் செங்குட்டுவன் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக அக்ஷயா நடிக்கிறார். மற்றும் கே.பிரபாகரன், இமான் அண்ணாச்சி, ஆடுகளம் நரேன், சிங்கம் புலி, நான்கடவுள் ராஜேந்திரன், ரவி மரியா, முத்துக்காளை, மகேந்திரன், நெல்லை சிவா, கூல் சுரேஷ், சார்மிளா, ராதா, ஜார்ஜ் மரியான் ஆகியோர் நடிக்கிறார்கள்.

நட்பு, காதல் இரண்டையும் மையப்படுத்தி உருவாகி வரும இப் படத்திற்காக நட்பை மையப்படுத்தி,

“அண்ணன் தம்பிய கூப்பிட்டுப் பாரு
அக்காவையும் கூப்பிட்டுப் பாரு
மாமன் மச்சான கூப்பிட்டுப் பாரு
மாப்பிளையையும் கூப்பிட்டுப் பாரு
சொந்த பந்தத்தையும் கூப்பிட்டுப் பாரு
உதவின்னு கேட்டுப் பாரு
யாரு வருவாங்கன்னு கேட்டுப் பாரு?
நண்பன கூப்பிட்டுப் பாரு! உயிரையே கொடுப்பான் பாரு…”

என்ற ஸ்ரீகாந்த் தேவா இசையில் உருவான பாடல்  நாயகன் செங்குட்டுவன் ஆடிப் பாட படமாக்கப் பட்டது.

கலகலப்பான படமாக நண்பர்கள் நற்பணி மன்றம் உருவாகி உள்ளது. இன்று இப்படத்தின் இசை வெளியீடு நடைபெற்றது. விரைவில் படம் திரைக்கு வர உள்ளது.

Read Previous

‘C2H’ தள்ளி வைப்பு ஏன் ? – சேரன் விளக்கம்

Read Next

இன்றைய ரிலீஸ் – 4 படங்கள்…

Most Popular