இன்று ஜனவரி 30, 2015 – வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்…
டூரிங் டாக்கீஸ்
ஸ்டார் மேக்கர்ஸ் தயாரிப்பில் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் இளையராஜா இசையைமப்பில் ஒரு படத்திற்குள் இரண்டு கதை கொண்ட படம். முதல் கதையில் எஸ்.ஏ.சந்திரசேகரன், அபி சரவணன், ஹேமமாலினி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இரண்டாவது கதையில் சுனு லட்சுமி, அஷ்வின், காயத்ரி, ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
இசை
எஸ்எஸ் புரொடக்ஷன் தயாரிப்பில் எஸ்.ஜே.சூர்யா இயக்கிய இசையமைத்து நாயகனாக நடித்துள்ள படம். சத்யராஜ், சாவித்ரி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
தரணி
மெலோடி மூவீஸ் தயாரிப்பில் குகன் சம்பந்தம் இயக்கத்தில் என்சோன் இசையமைத்துள்ள படம். ஆரி, குமரவேல், அஜய் கிருஷ்ணா, வருணிகா, சான்ட்ரா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
கில்லாடி
ஸ்ரீ சரவணா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் ஸ்ரீகாந்த் தேவா இயக்கத்தில் பரத், நிலா, விவேக் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.



