‘என்னை அறிந்தால்’ – அமெரிக்காவில் 95 திரையரங்குகளில் ரிலீஸ்…

Yennai Arindhaal - Gallery 2_00000‘என்னை அறிந்தால்’ திரைப்படம் நாட்கள் நெருங்க நெருங்க அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

அஜித்தின் முந்தைய படங்களான ‘வீரம், ஆரம்பம்’ ஆகியவற்றை விட இந்தப் படம் வேறு ஒரு தளத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குக் காரணம் இயக்குனர் கௌதம் மேனன்.

அஜித்தை முதன் முறையாக இயக்கும் அவர், கண்டிப்பாக ‘என்னை அறிந்தால்’ படத்தை நிச்சயம் வித்தியாசமாக எடுத்திருப்பார்.

தமிழ்நாட்டில் திரையிட இன்னும் வியாபாரம் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்காவில் 95 திரையரங்குகளில் இப்படம்வெளியாக உள்ளதாம்.

படத்தை அமெரிக்காவில் வெளியிடும் ‘அட்மஸ் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் இதைத் தெரிவித்துள்ளது. இதற்கு முன் ‘ஆரம்பம்’ படம் 78 திரையரங்குகளில் வெளியானது. இப்போது அந்த சாதனையை முறியடித்து ‘என்னை அறிந்தால்’ 95 திரையரங்குகளில் வெளியாகிறது.

அஜித் நடித்துள்ள ஒரு படம் அதிக திரையரங்குகளில் அமெரிக்காவில் வெளியாவது இதுவே முதல் முறை.

Read Previous

இன்றைய ரிலீஸ் – 4 படங்கள்…

Read Next

தரணி – விமர்சனம்