‘பட்ற’ – நண்பனுக்காக தயாரான படம்…

Patra - Gallery_00008ஜி.கே.சினிமாஸ் நிறுவனத்தின் சார்பாக வி.காந்திகுமார் தயாரிக்கும் படம் ‘பட்ற’.

ஜெயந்தன் இப்படத்தை இயக்க இப்படத்தை இயக்க ஸ்ரீகிருஷ்ணா இசையமைக்கிறார். மிதுன் தேவ் கதாநாயகனாகவும், ‘49 ஓ’ படத்தில் கவுண்டமணியின் மகளாக நடித்த வைதேகி கதாநாயகியாகவும் அறிமுகமாகிறார்கள். மற்றும் சாம் பால், ‘ரேணிகுண்டா’ கணேஷ், புலிபாண்டி, ஆதேஷ், உமா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கத்தி, அரிவாள் போன்ற இரும்பிலான ஆயுதங்கள் தயாரிக்கும் இடமான ‘பட்டறை’ என்பதைத்தான் பேச்சுத் தமிழில் ‘பட்ற’ என்று வைத்திருக்கிறார்கள்.

ஆறு வெவ்வேறு இளைஞர்கள் ஒரு மனிதரால் தனித்தனியாக பாதிக்கப்படுகிறார்கள். பாதிக்கப்பட்ட அவர்கள் எப்படி அந்த மனிதரை எதிர்கொள்கிறார்கள், அதற்காக அவர்கள் எப்படிப்பட்ட விளைவுகளை சந்திக்க நேரிடுகிறது என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

ஒரு நகரம் சார்ந்த கதையாதான் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறோம். இந்தப் படத்துல நடிச்சிருக்கிற எல்லாருமே புதுமுகங்கள்தான். புதுமுகங்களா இருந்தாலும் இந்தப் படத்தோட கதைக்கு அவங்க ரொம்ப பொருத்தமா இருப்பாங்க.

படத்தோட பெயரையும், டிசைனையும் பார்த்து இது வன்முறை கலந்த படமா இருக்குமான்னு பலர் நினைக்கிறாங்க. ஆனால், படத்துல வன்முறைலாம் இல்லை, நண்பர்களுக்காக நட்புக்காக நடக்கிற விஷயத்தைத்தான் சொல்லியிருக்கிறோம்.

படத்தோட இசையமைப்பாளர் ஸ்ரீகிருஷ்ணா பாரம்பரியமான இசைக்குடும்பத்துல இருந்து வந்தவரு. படத்துல இனிமையான பாடல்களும் இருக்கு. இந்த மாதக் கடைசியில படத்தை வெளியிடலாம் என இருக்கிறோம்,” என்றார்.

படத்தின் தயாரிப்பாளர் வி. காந்திகுமாரும், இயக்குனர் ஜெயந்தனும் சிறு வயது முதலே நண்பர்களாம். அப்போதே இவர்களிருவரும் எதிர்காலத்தில் படங்கள் தயாரிப்பது, இயக்குவதைப் பற்றி பேசிக் கொள்வார்களாம்.

Read Previous

ஸ்டுடியோக்களை வியந்து பார்த்தேன் – ஜோஸ் செல்வராஜ்

Read Next

இன்றைய ரிலீஸ் – 3 படங்கள்

Most Popular