‘என்னை அறிந்தால்’ படம் கடந்த 5ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியானது. கடந்த 18 நாட்களில் இந்தப் படம் 100 கோடி ரூபாயைத் தாண்டியிருப்பதாக கோடம்பாக்க வியாபார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
படம் வெளியான முதல் வாரத்தில் அபாரமான வசூலையும், அதன் பின் சராசரியான வசூலையும் பெற்ற இந்தப் படம் உலகம் முழுவதும் வசூலித்த தொகை 100 கோடியைத் தாண்டியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் சுமார் 61 கோடி ரூபாயையும், கர்நாடகாவில் 6 கோடி, கேரளாவில் 5 கோடி, உலக அளவில் 29 கோடி ரூபாயையும், மற்ற மாநிலங்களில் 2 கோடி ரூபாயும் வசூலித்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
இது திரையரங்குகள் மூலம் வந்த வருமானம் மட்டுமே, படத்தின் தொலைக்காட்சி உரிமை, வேற்று மொழிஉரிமை ஆகியவற்றைச் சேர்த்தால் மேலும் ஒரு 20 கோடி ரூபாயையும் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம் என்கிறார்கள்.
அஜித்தின் முந்தைய படங்களான “ஆரம்பம், வீரம்” படங்களை விட ‘என்னை அறிந்தால்’ வசூல் அதிகம் என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள்.