இன்று நயன்தாரா, நேற்று த்ரிஷா, அதற்கு முன் சிம்ரன் என்றுதான் தமிழ் சினிமாவில் ஒரு ‘டிரெண்ட்’ இருக்கிறது.
90களில் தமிழ்த் திரையுலகில் நம்பர் 1 நடிகையாக இருந்தவர் சிம்ரன். அஜித், விஜய், சூர்யா, பிரசாந்த், கமல்ஹாசன், சரத்குமார், விஜயகாந்த், அர்ஜுன் என பலருடனும் ஜோடியாக பல வெற்றிப் படங்களில் நடித்தவர்.
திருமணத்திற்குப் பின் நடிப்பதை குறைத்துக் கொண்டார். பின்னர் ரீ-என்ட்ரியான சிம்ரன் ‘சேவல், வாரணம் ஆயிரம், ஐந்தாம் படை, ஆஹா கல்யாணம்’ ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் ‘வாரணம் ஆயிரம்’ படம் தவிர வேறு எந்தப் படமும் அவருக்கு பெயர் பெற்றுத் தரவில்லை.
தற்போது ஜி.வி.பிரகாஷ்குமார், ஆனந்தி நடிக்கும் ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.
படத்தின் கதையை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் சொன்னதுமே நடிக்க சம்மதித்திருக்கிறார் சிம்ரன். மார்ச் மாதம் முதல் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளாராம்.