’ஓ காதல் கண்மணி’ ஆன ‘ஓகே கண்மணி’…

o-kadhal-kanmani-newsமணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் துல்கர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ் மற்றும் பலர் நடிக்கத் தயாராகி வந்த ‘ஓகே கண்மணி’ படம் ‘ஓ காதல் கண்மணி’ என பெயர் மாற்றப்பட்டுள்ளது.

முதலில் காதலர் தினத்தன்று வெளியான படத்தின் முதல் பார்வையில் ‘ஓகே கண்மணி’ என்றுதான் பெயரைக் குறிப்பிட்டிருந்தார்கள்.

ஆனால், நேற்று ‘ஓகே’ என்றால் என்ன தெரியுமா…அது ‘ஓ காதல்’ என்பதன் சுருக்கம் என்று சொல்லி ‘ஓ காதல் கண்மணி’ என புதிய பெயருடன் படத்தின் டிசைனை வெளியிட்டார்கள்.

விக்ரம் நடித்து 1990ம் ஆண்டு ‘என் காதல் கண்மணி’ என்ற பெயரில் ஒரு படம் வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் நடித்த ‘சிங்காரவேலன்’ படத்தில் ‘போட்டு வைத்த காதல் திட்டம்…ஓகே கண்மணி’ என்றொரு வித்தியாசமான பாடல் இடம் பெற்றிருக்கும். உதயநிதி ஸ்டாலின், ஹன்சிகா நடித்த ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படமும் ‘ஓகே ஓகே’ என்றுதான் குறிப்பிடப்பட்டது. ‘ஓ காதல் கண்மணி’ என்ற டைட்டில் பழைய டைட்டிலாகத் தோன்றினாலும் இது மணிரத்னம் படமாச்சே, அதனால் யாரும் அதைப் பற்றிப் பெரிதாகப் பேச மாட்டார்கள்.

மணிரத்னத்தின் புதிய படத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளதா, அல்லது படத்தைப் பற்றி பேச வைப்பதற்காக செய்யப்பட்ட விளம்பரமா என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

ஆனாலும், டிவிட்டரில் போகப் போக ‘OKK’ என ரசிகர்கள் இன்னும் பெயரை சுருக்கி விடுவார்கள்.

Read Previous

‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’வில் சிம்ரன்…

Read Next

பா.மீனாட்சி சுந்தரம் – புதிய பாடலாசிரியர்…

Most Popular