‘கொம்பன்’ படத்திற்கு எதிராக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் போடப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
‘கொம்பன்’ படம் வெளியானால் அது சாதிய மோதல்களுக்கு வழி ஏற்படுத்தும் என புதிய தமிழகம் கட்சியின் சார்பாக மதுரை உயர் நீதி மன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
அதைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் நேற்று சென்னையில் ‘கொம்பன்’ படத்தை பார்க்க ஏற்பாடு செய்தனர். ஆனால், அவர்களைப் படத்தைப் பார்க்க விடாமல் புதிய தமிழக கட்சியினர் வெறுப்பேற்றும் வேலைகளை செய்துள்ளனர். பின்னர் படத்தைப் பார்க்காமல் நீதிபதிகள் சென்று விட்டனர்.
இந்தத் தகவலை நேற்று மாலை திரைப்பட சங்கங்களின் தலைவர்களுடன் படக்குழுவினர் பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.
சற்று முன்னர் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் படத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தனர்.
நேற்றைய அறிவிப்பின்படி இன்று மாலை காட்சி முதல் ‘கொம்பன்’ திரைப்படம் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் உலகம் முழுவதும் வெளியாகிறது.