இந்தியாவின் மிகப் பிரம்மமாண்டமான படமாகத் தயாராகியுள்ள ‘பாகுபலி’ படத்தின் சென்சார் முடிவடைந்து படத்திற்கு ‘யு-ஏ’ சர்டிபிகேட் வழங்கியிருக்கிறார்கள்.
அதைத் தொடர்ந்து ஜுலை 10, அதாவது அடுத்த வெள்ளியன்று படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமான விளம்பரத்தையும் வெளியிட்டுள்ளார்கள்.
‘நான் ஈ’ வெற்றிப் படத்தைத் தொடர்ந்து எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் மரகதமணி இசையமைப்பில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர் மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படம் இரண்டு பாகங்களாக தயாராகியுள்ளது.
முதல் பாகம்தான் அடுத்த வாரம் வெளியாகிறது. உலகம் முழுவதும் சுமார் 4000 திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்தப் படம் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 400 திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகத் தெரிகிறது.