சிம்பு நடிக்கும் ‘வாலு’ படத்திற்காக இதுவரை படமாக்கப்படாமல் இருந்த ‘தாறுமாறு…’ பாடல் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.
சென்னை, கிண்டியில் உள்ள கேம்ப கோலா மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான அரங்கில் சிம்புவும், ஹன்சிகாவும் நடனமாடும் பாடல் காட்சியை பரபரப்பாக படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தப் பாடலில் எம்ஜிஆர், ரஜினிகாந்த், அஜித் ஆகியோருடைய தோற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் மேக்-அப் போட்டு சிம்பு நடனமாடுகிறாராம்.
முதலில் இதற்காக அந்தக் கால ஹீரோயின்களுடன் சிம்பு நடனமாடுவதைப் போல யோசித்து வைத்திருந்தார்களாம். அதன் பின் படத்தின் நாயகியான ஹன்சிகாவை வைத்தே படமாக்கினால் நன்றாக இருக்கும் என அவரை அணுகியிருக்கிறார்கள்.
இந்தப் பாடலை படமாமக்கும் இடத்திலேயே படத்தொகுப்பையும் செய்து வருகிறார்களாம். பின்னே, ஜுலை 17ம் தேதி ரிலீஸ் என்று அறிவித்தபின் சுடச் சுட செய்யவில்லை என்றால் எப்படி…?