தன்னுடைய 2 டி என்டர்டெயின்மென்ட் மூலம் தரமான படங்களைத் தயாரிக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் சூர்யா, ‘36 வயதினிலே, பசங்க 2, 24, மகளிர் மட்டும், கடைக்குட்டி சிங்கம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ‘உறியடி 2’ படத்தைத் தயாரிக்கிறது.
2016ம் ஆண்டு வெளிவந்த உறியடி படம் திரை ரசிகர்களின் பெரும் கவனத்தை ஈர்த்த ஒரு படமாக அமைந்தது.
‘உறியடி’ படத்தை இயக்கிய விஜயகுமார் இப்படத்தை இயக்குகிறார்.
இந்த படத்தின் இணை தயாரிப்பாளரான ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியனுடன், தனது சோவ்னீர் புரொடக்சன்ஸ் சார்பில் மற்றுமொரு இணை தயாரிப்பாளராகவும் இணைகிறார் விஜய்குமார்.
நாயகனாக விஜய்குமார் நடிக்க, நாயகியாக கேரளாவை சேர்ந்த புதுமுகம் விஸ்மயா அறிமுகமாகிறார். ‘மெட்ராஸ் சென்ட்ரல்’ சுதாகர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் ‘உறியடி’யில் கவனம் ஈர்த்த ஷங்கர்தாஸ், அப்பாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்துள்ள ’96’ படத்திற்கு இசையமைத்துள்ள கோவிந்த் மேனன் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். ‘உறியடி’ படத்தில் இணை ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய பிரவீண் குமார் இந்தப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். படத்தொகுப்பு – லினு (அறிமுகம்), கலை – ஏழுமலை ஆதிகேசவன், சண்டைப் பயிற்சி – விக்கி.
சமூகத்துக்குத் தேவையான ஒரு கருத்துடனும், அதே சமயம் பொழுதுபோக்கு அம்சங்களுடனும் இந்தப்படம் உருவாக இருக்கிறது. பூஜையுடன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. குற்றாலம், தென்காசி ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்த உள்ளனர்.