உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘ஏஞ்சல்’

‘ஏபிசிடி, நேபாளி’ ஆகிய படங்களைத் தயாரித்த ஓஎஸ்டி பிலிம்ஸ் நிறுவனம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தயாரிக்கும் படம் ‘ஏஞ்சல்’.

‘தொட்டாசிணுங்கி, சொர்ணமுகி, பிரியசகி, தூண்டில்’ ஆகிய படங்களை இயக்கிய கே.எஸ்.அதியமான் இப்படத்தை இயக்குகிறார்.

தெலுங்கில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய ‘ஆர்எக்ஸ் 100’ படத்தின் நாயகியாக நடித்த பாயல் ராஜ்புத், ‘கயல்’ ஆனந்தி இப்படத்தின் நாயகிகளாக நடிக்கிறார்கள். இமான் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு – கவியரசு, படத்தொகுப்பு – ஜீவன், ஸ்டண்ட் – ரமேஷ் (விஸ்வரூபம் 2) கலை இயக்குநர் – சிவா, நடன இயக்குநர் – தினேஷ்.

‘உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணித்த பின்னும் மறக்காது ஏஞ்சல்’ என்பதை உணர்த்தும் ரொமாண்டிக் ஹாரர் படமாக இப்படம் உருவாகிறது.

இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட உள்ளது.

Read Previous

ராட்சசன் – டிரைலர்

Read Next

சூர்யா தயாரிக்கும் ‘உறியடி 2’