எக்ஸட்ரா எண்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் வி.மதியழகன், ஆர்.ரம்யா தயாரிக்கும் படம் ‘தேவதாஸ் பிரதர்ஸ்’.
‘3, நய்யாண்டி, வேலையில்லா பட்டதாரி’ ஆகிய படங்களில் இயக்குனர்கள் ஐஷ்வர்யா தனுஷ் , சற்குணம், வேல்ராஜ் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கே.ஜானகிராமன் இப்படத்தை இயக்குகிறார்.
திலகர் ‘ துருவா , பாலசரவணன் , அஜய் பிரசாத் ,’மெட்ராஸ்’ ஜானி ஆகிய நால்வருமே இந்தப் படத்தில் நாயகர்களாக நடிக்கிறார்கள். சஞ்சிதா ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். படத்தில் நால்வருக்குமே கதையில் சம இடம் உண்டு.
“சென்னையில் அடையாறு, ஆழ்வார்பேட்டை, கே.கே நகர், வியாசர்பாடி என நான்கு வெவ்வேறு பகுதிகளில் இருக்கும் நான்கு இளைஞர்கள். சம்பந்தமில்லாத இந்த நான்கு பேரும் ஒருவரை ஒருவர் அறியாமலேயே ஒருவர் வாழ்க்கையில் சம்பந்தப்படுகிறார்கள். அது தெரிந்த பிறகு அவரவர் வாழ்க்கையில் ஏற்படும் திருப்பங்கள் என்ன என்பதே படத்தின் கதை. அவர்கள் யார் ? எப்படி ஒன்று சேர்கிறார்கள் ? என்பதே திரைக்கதையின் போக்கு.
திலகர் ‘ படத்தில் திடுதிப்பென வந்து மிரட்டிய துருவா,காமெடியில் வளர்ந்து வருகிற பால சரவணன், ‘ராஜ தந்திர’த்தில்’ கவனம் பெற்ற அஜய் பிரசாத், ‘மெட்ராஸ்’ படத்தில் கவனம் ஈர்த்த ஜானி என இந்த நால்வருக்கும் இந்தப் படம் அடுத்த சில படிகளாக இருக்கும்,” என்கிறார் இயக்குனர்.
படத்துக்கு ஒளிப்பதிவு ‘சலீம் ‘பட ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா , இசை ”போடா போடி’ படத்துக்கு இசையமைத்த தரன், படத்தொகுப்பு ‘வேலையில்லா பட்டதாரி’யில் பணியாற்றிய எம். வி ராஜேஷ் குமார்.
முழுக்க முழுக்க சென்னையில் மட்டுமே படமாகும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.