அக்ஷயா கிரியேசன்ஸ் தயாரிக்க A.M.R.ரமேஷ் இயக்கி வரும் படம் ‘ஒரு மெல்லிய கோடு’.
இந்தப் படத்தில் அர்ஜுன், ஷாம், அக்ஷா பட், மனிஷா கொய்ராலா, ரவி காலே மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, டப்பிங் உள்ளிட்ட வேலைகளும் முடிவடைந்துவிட்டது. பின்னணி இசைச் சேர்ப்பு மட்டுமே நடக்க வேண்டுமாம். அந்தப் பணிகளை இளையராஜா விரைவில் மேற் கொள்ள உள்ளார்.
தற்போது இப்படத்தின் பாடல்கள் காட்சிகள் பாங்காக்கில் படமாக்கப்பட்டு வருகிறது.
ஷாம் – மனிஷாகொய்ராலா பங்கேற்க
“யார் இந்த
வெல்வெட் கவிதை
நெஞ்சில் பூ கொட்டும் பறவை…” என்ற பாடல் காட்சியும்
ஷாம் – அக்ஷா பட் பங்கேற்க,
“ஒரு மெல்லிய கோடு… மிக துல்லியமாக…” என்ற பாடல் காட்சியும் மிகவும் பிரம்மாண்டமாக படமாகி வருகிறதாம்.
இதற்காக ஷாம் – மனிஷா கொய்ராலா – அக்ஷாபட், நடன இயக்குனர் ராதிகா, இயக்குனர் ரமேஷ் உட்பட படக்குழுவினர் பாங்காக் சென்றுள்ளார்கள்.
செப்டம்பர் மாதம் ‘ஒரு மெல்லிய கோ’ திரைக்கு வருகிறது.