திருப்தியான வசூலில் ‘ஆவி குமார்’

ஏடிஎம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் காண்டீபன் இயக்கத்தில் ஸ்ரீகாந்த் தேவா – விஜய் ஆண்டனி இசையில் உதயா, கனிகா திவாரி, ஜெகன், நாசர், மனோபாலா, முனீஸ்காந்த், தேவதர்ஷினி மற்றும் பலர் நடித்த ‘ஆவி குமார்’ படம் கடந்த வாரம் 24ம் தேதி தமிழகமெங்கும் வெளியானது.

வித்தியாசமான காதல் கதையுடன் கூடிய நகைச்சுவைப் படமாக இந்தப் படம் இருப்பதால் வெளியான திரையரங்குகளில் படத்திற்கு திருப்திகரமான வசூல் கிடைத்து வருகிறதாம்.

சமீப காலமாக வெளிவந்த பேய்ப் படங்களில் இந்தப் படம் வித்தியாசமான படமாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். இது மாதிரியான சிறிய படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தால் இது போன்ற பல படங்களும் வெற்றி பெற்று திரையுலகம் நன்றாக இருக்கும் என வினியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் தெரிவிக்கிறார்கள்.

நேற்றிலிருந்து இன்னும் கூடுதலான திரையரங்குகளில் படம் வெளியிடப்பட்டுள்ளது. வெற்றியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ள படத்தின் நாயகன் உதயா திரையரங்குகளுக்கு நேரடியாகச் செல்லவும் திட்டமிட்டுள்ளார்.

இந்த வாரம் சில புதுப் படங்கள் வந்தாலும் ‘ஆவி குமார்’ படத்திற்கான வரவேற்பு அப்படியே இருக்கும் என்றே தெரிவிக்கிறார்கள்.

Read Previous

‘ஆகம்’ படத்தில் அப்துல் கலாம் பற்றிய பாடல்…

Read Next

அழகான காதல் கதையுடன் ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’

Most Popular