‘மகாத்மா’ கலாம் – ரஜினிகாந்த் புகழாரம்

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு ரஜினிகாந்த் டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,

“மகாத்மா காந்தி, காமராஜர், பாரதியார் ஆகியோரை நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைக்கவில்லை. ஆனால் மகாத்மா கலாமுடன் வாழ்ந்த ஆசீர்வாதம் கிடைத்தது.

மிகப் பெரிய உயரத்திற்குச் சென்ற பின்னரும் அதே பணிவுடனும், எளிமையுடனும் வாழ்ந்தவர். பல லட்சம் மக்களுக்கு முன்னுதாரணமாய் விளங்கியவர். மாணவர்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டு பல தளங்களில் அவர்களை ஊக்கப்படுத்தியவர். கடவுள் அன்புடன் அவரைத் தழுவிக் கொண்டுள்ளார்.

அவருடைய ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்,” என ரஜினிகாந்த் டிவிட்டர் வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Read Previous

பரவை முனியம்மாவுக்கு விஷால் செய்த உதவி !

Read Next

அப்துல் கலாம் மறைவு – கமல்ஹாசன் இரங்கற்பா

Most Popular