தமிழ் சினிமாவில் ‘தூள்’ படத்தில் இடம் பெற்ற ‘சிங்கம் போல பறந்து வரான் செல்லப் பேராண்டி’ பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பேசப்பட்டவர் நாட்டுப் புறப் பாடகியான பரவை முனியம்மா.
அதன் பின் பல படங்களில் ஹிட்டான பாடல்களைப் பாடியும், சில படங்களில் நடித்தும் இருக்கிறார்.
சமீபத்தில் குமுதம் வார இதழில் வறுமையில் வாடும் அவரைப் பற்றிய பேட்டி ஒன்று வெளியாகியிருந்தது. தனக்கு உடல்நிலை சரியில்ல என்றும் மனநலம் குன்றிய ஒரு மகன் உட்பட இரு மகன்களுடன் வாழ சிரமப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.
அதைப் படித்த விஷால், மதுரையில் பரவை முனியம்மாவை நேரடியாகச் சந்தித்து ஐந்தாயிரம் ரூபாய் வழங்கியதுடன், இனி மாதாமாதம் ஐந்தாயிரம் ரூபாய் வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.
வேறு எந்த நடிகரும் உதவ வருவதற்கு முன் உதவுவதாக சொல்லாமல் உண்மையிலேயே உதவியும் செய்துள்ள விஷாலின் பெரிய மனது பாராட்டப்பட வேண்டிய ஒன்று.