ஸ்ரீ கிரீன் புரொடக்சன்ஸ் சார்பில் சரவணன் வெளியிடும் திரைப்படம் ‘சண்டி வீரன்’. இதற்கு முன் ‘மாசாணி’ திரைப்படத்தை வழங்கியுள்ளார்கள். தற்போது சத்யராஜ், சிபிராஜ் நடிக்கும் ‘ஜாக்சன் துரை’ படத்தைத் தயாரித்து வருகிறார்கள்.
இயக்குனர் பாலா அவருடைய பி ஸ்டுடியோஸ் சார்பாக ‘சண்டி வீரன்’ படத்தைத் தயாரித்திருக்கிறார். ‘பிசாசு’ படத்திற்குப் பிறகு பாலா தயாரிப்பில் வெளிவரும் படம் இது.
‘களவாணி, வாகை சூடவா, நய்யாண்டி’ படங்களுக்குப் பிறகு சற்குணம் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
பாலாவின் இயக்கத்தில் ‘பரதேசி’ படத்தில் நடித்த அதர்வா, தற்போது பாலாவின் தயாரிப்பிலும் நடித்துள்ளார். முதல் முறையாக ஒரு கிராமத்து இளைஞன் கதாபாத்திரத்தில் அதர்வா நடித்துள்ளார்.
‘பொறியாளன், கயல்’ படங்களுக்குப் பிறகு ஆனந்தி நாயகியாக நடிக்கும் படம் இது.
‘சண்டக் கோழி’ படத்தில் பவர்ஃபுல் வில்லனாக நடித்த லால் இந்தப் படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்.
இதற்கு முன் சில சிறிய படங்களுக்கு இசையமைத்துள்ள அருணகிரி இந்தப் படம் மூலம் அதிகம் பேசப்பட வாய்ப்புள்ளது.
குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் படமாக இந்தப் படம் இருக்கும் என்கிறார் இயக்குனர் சற்குணம்.
நாளை உலகம் முழுவதும் ‘சண்டி வீரன்’ வெளியாகிறது.