‘ஜிகினா’ வெற்றி பெறும் – விஜய் வசந்த் நம்பிக்கை

ரவி நந்தா பெரியசாமி இயக்கத்தில் விஜய் வசந்த், சானிய தாரா நடித்துள்ள ‘ஜிகினா’ படம் நாளை மறுநாள் 21ம் தேதி வெளியாக உள்ளது.

சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கை மையப்படுத்தி இந்தப் படத்தின் கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.

படம் பற்றி நாயகன் விஜய் வசந்த் கூறியதாவது,

நமது வாழ்வில் இன்றியஅமையாத அங்கமாகி விட்ட face book தான், ‘ஜிகினா’ வின் முக்கிய கதாபாத்திரம். இன்றைய சமூகத்தில் நிலவும் ஒரு முக்கிய பிரச்சினையான சமூக வளைத் தளங்களில் வரும் போலி அடையாளங்களைப் பற்றியக் கதைதான் ‘ஜிகினா’.

இன்றைய வர்த்தக உலகத்தில் நிறம் என்பது தான் குணத்தையே நிர்ணயம் செய்யும் என்ற எண்ணத்தில் தான் பலரும் உள்ளனர். கருப்பாக உள்ளவர்கள் சிவப்பாக உள்ளவர்களை விட எந்த வகையிலும் குறைந்தவர்கள் அல்ல. இதை குறையாக நினைத்து, போலி அடையாளம் மூலம் மற்றவரை கவர நினைக்கும் ஒரு இளைஞனைப் பற்றியக் கதை தான் இந்தப் படம். அந்த இளைஞன்தான் நான், நான்தான் ‘ஜிகினா’.

என்னுடைய கதாபாத்திரத்தை இயக்குனர் ரவி நந்தா பெரியசாமி மிக அருமையாக வடிவமைத்து உள்ளார். படம் பார்த்த பின்னர், அரங்கில் இருந்து வெளி வரும் ரசிகர்கள் இடையே என்னுடைய கதாபாத்திரம் பெரிய அளவுக்கு பேசப்படும் என்பதில் எனக்கு மிகப் பெரிய நம்பிக்கை உண்டு. வளர்ந்து வரும் என்னைப் போன்ற நடிகர்களுக்கு கிடைக்கும் இத்தகையக் கதா பாத்திரம் மிக பெரிய வரமாகும்.

‘ஜிகினா’ திரைப்படத்தை இயக்குனர் லிங்குசாமியின் நிறுவனம் வெளியிட இருப்பது எனக்கு மிகப் பெருமை. அதற்காக லிங்குசாமி சாருக்கும், போஸ் சாருக்கும் நன்றிகள் பல.

இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான படமாக இந்தப் படம் இருக்கும். அதுவே வர்த்தக ரீதியாக இந்தப் படம் பெரும் வெற்றி பெற உதவும் என்பதில் சந்தேகமே இல்லை,” என்கிறார் விஜய் வசந்த்.

Read Previous

‘இது நம்ம ஆளு’ இசை – விரைவில்…

Read Next

Puli – Official Trailer

Most Popular