சம்பளமே வாங்காமல், பணமே பெற்றுக் கொள்ளாமல் ஒரு வேலையைச் செய்தால் ‘அஞ்சி பைசா கூட வாங்கலை’ என்ற வாக்கியத்தை பலர் வாயிலிருந்து பேசக் கேட்டிருப்போம்.
அப்படித்தான் ‘இஞ்சி இடுப்பழகி’ படத்திற்காக இடுப்பையும், உடலையும் சேர்த்து குண்டாக்கிக் கொண்ட அனுஷ்கா இதுவரை ‘அஞ்சி’ பைசா கூட சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுத்துள்ளாராம்.
தெலுங்கு மீடியாக்களில் இது பற்றிய செய்திதான் அதிகமாக உலவி வருகிறது. படத்தின் இயக்குனர் பிரகாஷ் கொவேலமுடி படத்தின் கதையைச் சொன்ன போதே மிகவும் உருகிப் போன அனுஷ்கா, தன்னுடைய சம்பளம் இவ்வளவு என்று எதுவுமே கேட்காமல் நடித்து முடித்துள்ளார்.
இந்தக் காலத்தில் இப்படி ஒரு நடிகையா என தெலுங்குப் பட உலகமே ஆச்சரியமாகப் பார்க்கிறதாம்.
அக்டோபர் மாதம் 2ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.