அதிக சம்பளம் பெறும் நடிகை

தமிழ்த் திரையுலகத்தைப் பொறுத்தவரையில் தற்போதைக்கு நயன்தாராதான் அதிகமான சம்பளம் பெறும் நடிகை என கோடம்பாக்கத்தில் ஒரு தகவல் உண்டு.

கடந்த சில படங்களாக நயன்தாரா ஒன்றரை கோடி ரூபாய் முதல் இரண்டு கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார் என ஏற்கெனவே தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாயகர்களின் சம்பளத்துடன் நாயகிகளின் சம்பளத்தை ஒப்பிட்டால் நாயகிகளின் சம்பளம் குறைவுதான்.

ஆனால், ஹிந்தித் திரையுலகில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக தற்போதைக்கு கங்கனா ரணவத் இருக்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் ஒரு படத்தில் நடிப்பதற்காக அவருக்கு 10 கோடிக்கும் மேல் சம்பளம் தரப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். ‘குயின், தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ்’ ஆகிய படங்களின் வெற்றிதான் கங்கனாவை பாலிவுட்டில் நம்பர் 1 சம்பளம் பெறும் நடிகையாக உயர்த்தியுள்ளது.

அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்பதைப் பற்றி அவரிடம் கேட்ட போது, “எனக்கு அளிக்கப்படும் கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு ஒரு வருடத்திற்கு மேல் ஆகிறது. அதனால், அந்த சம்பளம் நியாயம் என்றே எனக்குத் தோன்றுகிறது,” என்று பதிலளித்திருக்கிறார்.

Read Previous

‘அஞ்சி’ பைசா கூட வாங்காத ‘இஞ்சி இடுப்பழகி’…

Read Next

ரஜினிகாந்த் விரும்பி சாப்பிடும் ‘சிரஞ்சீவி தோசை’…

Most Popular