‘வேதாளம்’ பார்க்க ஆசைப்படும் சிரஞ்சீவி

‘வேதாளம்’ படத்தின் சூப்பர் ஹிட் மொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்து விட்டது.

தென்னிந்தியத் திரையுலகம் பக்கம் எப்போதாவது மட்டும் திரும்பும் வடநாட்டு செய்திச் சேனல்கள் கூட ‘வேதாளம்’ படம் பற்றி சிறப்புச் செய்திகளை வெளியிட்டன.

முதல் நாளில் 15 கோடிக்கு மேலும் இரண்டாவது நாளில் 10 கோடிக்கு மேலும் சுமார் 25 கோடிக்கு மேல் ‘வேதாளம்’ வசூல் செய்துள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, தெலுங்குத் திரையுலகினரும் ‘வேதாளம்’ படத்தின் வெற்றி குறித்து விசாரிக்க ஆரம்பித்து விட்டார்களாம். அதிலும் குறிப்பாக தன்னுடைய 150 படத்திற்காக கடந்த ஒரு வருடங்களாக கதை கேட்டுக் கொண்டிருக்கும் சிரஞ்சீவி, ‘வேதாளம்’ படத்தைப் பார்க்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறாராம்.

விரைவில் அவருக்காக ‘வேதாளம்’ படத்தை பிரத்யேகமாகத் திரையிட்டுக் காட்ட உள்ளார்கள் என ஹைதராபாத்திலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read Previous

144 – Official Theatrical Trailer

Read Next

திருமண வதந்தி, அனுஷ்கா தரப்பு மறுப்பு

Most Popular