திருமண வதந்தி, அனுஷ்கா தரப்பு மறுப்பு

தமிழ், தெலுங்குத் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் அனுஷ்காவுக்கும், ‘பாகுபலி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான பிரபாஸுக்கும் இடையே காதல் என்றும், அதை பிரபாஸ் குடும்பத்தினர் விரும்பவில்லை என்றும் செய்திகள் வெளியாகின.

ஹைதராபாத்திலிருந்து சென்னை வரை இந்த வதந்தி வேகமாகப் பரவியது. பிரபாஸுக்கு அனுஷ்காவைத் திருமணம் செய்து வைக்கப் பிடிக்காமல் பிரபாஸின் உறவுக்காரப் பெண் ஒருவரைத் திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்திருக்கிறார்கள் என்றும் வதந்திகள் பரவின.

பிரபாஸுடன் இதுவரை ஐந்து படங்களில் இணைந்து நடித்துள்ளவர் அனுஷ்கா. பிரபாஸுடன் எத்தனை படங்களில் வேண்டுமானாலும் நடிக்கலாம் என இதற்கு முன்பும் அவர் ஒரு பேட்டியில் கூறியிருந்திருக்கிறார்.

இப்படி பல விஷயங்களை இணைத்து திடீரென கடந்த சில நாட்களாக அந்த காதல் தோல்வி வதந்தி  பரவியுள்ளது.

ஆனால், அனுஷ்கா தரப்பு இப்படிப்பட்ட வதந்தி எங்கிருந்துதான் பரவுகிறது என்றே தெரியவில்லை. இதுவரை அனுஷ்காவைப் பற்றி பல முறை காதல் வதந்திகளும், திருமண வதந்திகளும் வெளிவந்துவிட்டது. தற்போது அதையெல்லாம் அனுஷ்கா பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று சொல்லியிருக்கிறார்கள்.

மேலும், அனுஷ்கா ‘இஞ்சி இடுப்பழகி’ படத்திற்காக ஏற்றிய உடல் எடையை அமெரிக்காவோ, தாய்லாந்தோ சென்று குறைக்கப் போவதில்லையாம். இங்கேயே உடற்பயிற்சி செய்து குறைக்க உள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்கள்.

இன்னும் எத்தனை கிசுகிசுக்களில்தான் அனுஷ்கா பெயர் அடிபடுமோ….?

Read Previous

‘வேதாளம்’ பார்க்க ஆசைப்படும் சிரஞ்சீவி

Read Next

Eetti – Official Trailer