அனைவருக்கும் பிடிக்கும் ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’

அவினி மூவீஸ் நிறுவனம் சார்பாக இயக்குநர் சுந்தர்.சி அவர்கள் தயாரித்துள்ள திரைப்படம் ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர்கள் வைபவ் , ஐஸ்வர்யா ராஜேஷ், ஓவியா, வி.டி.வி.கணேஷ் , சிங்கம்புலி, யோகி பாபு , சிங்கர்பூர் தீபன், இயக்குநர் பாஸ்கர், தயாரிப்பாளர் சுந்தர்.சி, இசையமைப்பாளர் சித்தார்த் விபின் , பாடலாசிரியர்கள் மோகன் ராஜன், பிரபா ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் தயாரிப்பாளர் சுந்தர்.சி பேசும் போது, “இயக்குநர் பாஸ்கரை எனக்கு நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் தான் தெரியும். அவர் எடுக்கும் நகைச்சுவை குறும்படங்களுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். அவரை வைத்து நான் படம் தயாரிக்கலாம் என்று முடிவு செய்தேன். ‘திருடர்கள் ஜாக்கிரதை’ என்னும் கதையைத் தான் அவர் முதலில் கூறினார்.

பிறகு என்னிடம் பேய் கதை இருக்கிறது என்று அவர் கூறியதும். அந்த கதை டெவலப் செய்து வர்ற பத்து நாள் அவகாசம் கொடுத்தேன். ஆனால் அவர் மூன்றே நாட்களில் கதை முடித்து வந்து என்னிடம் பேசினார். படம் நன்றாக வந்துள்ளது , மக்களுக்குக் கண்டிப்பாக இந்தப் படம் பிடிக்கும்,” என்றார்.

படத்தின் பாஸ்கர் இயக்குனர் பேசும் போது,

“நான் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் குறும் படம் இயக்கி இன்று திரைப்பட இயக்குநராக உயர்ந்துள்ளேன். பிப்ரவரி இருபதாம் தேதி என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத நாள் என்றே சொல்லவேண்டும் , இந்த நாளில் தான் நான் இயக்குநரிடம் கதையை கூறினேன். முதல் பாதியை கேட்ட இயக்குநர் என்னை இந்த படத்தை இயக்க சொன்னார். அப்படி என்னிடம் சொன்ன பிறகு தான் இரண்டாம் பாதியின் மீதி கதையைக் கேட்டார். இயக்குநர் சுந்தர் சி அவர்களிடம் கதை கூறிய பிறகு தான் என்னுடைய வாழ்க்கையே மாறியது,” என்றார்.

Read Previous

Arya and Anushka’s biggest release

Read Next

Vairamuthu turns up

Most Popular