தமிழர்களைப் பற்றி எந்த ‘பன்ச்’ டயலாக்கும் பேசியதில்லை, ஒரு துளி வியர்வைக்கு தங்கக் காசு கொடுத்தது தமிழல்லவா என எந்தப் படத்திலும் பாடியதில்லை, இருந்தாலும் வெள்ள நிவாரண உதவியாக தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார்களை விட இரண்டு ஹீரோயின்கள் நிவாரணத் தொகை கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்கள்.
சில நாட்களுக்கு முன்பு நடிகை ஹன்சிகா 15 லட்ச ரூபாயை நிதியுதவியாக அளித்தார். அடுத்து நடிகை ஸ்ரீதிவ்யா 10 லட்ச ரூபாயை தனது நிவாரணத் தொகையாக இன்று அளித்துள்ளார்.
தெலுங்கிலிருந்து தமிழுக்கு வந்து, தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்த ஸ்ரீதிவ்யா கொடுத்துள்ள 10 லட்ச ரூபாய் நிதியுதவி உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய ஒன்று. ஹன்சிகா ஹிந்தியிலிருந்து தமிழுக்கு வந்தவர்.
ஹன்சிகா, ஸ்ரீதிவ்யாவைத் தவிர வேறு எந்த நடிகைகளும் குறிப்பாக சென்னையைச் சேர்ந்த த்ரிஷா, சமந்தா ஆகியோரும் இதுவரை நிதியுதவி பற்றி எதுவும் அறிவிக்காதது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.