டிசம்பர் 24-ல் ‘அஞ்சல’ வெளியீடு

ஃபார்மர்ஸ் மாஸ்டர் பிளான் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் தங்கம் சரவணன் இயக்கத்தில் விமல், நந்திதா, பசுபதி மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘அஞ்சல’.

தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் அடையாறு ஆற்றில் வெள்ளம் வந்ததற்கான முக்கியமான காரணமாக சொல்லப்படும் ‘ஆக்கிரமிப்பு’ தான் இந்தப் படத்தின் மையக் கருவாம்.

சாலையை விரிவாக்கம் செய்ய அரசாங்கம் முடிவெடுத்ததால் பாதிக்கப்படும் தன்னுடைய பரம்பரை சொத்தான டீ கடையைக் காப்பாற்ற நாயகன் என்ன செய்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

ஆக்கிரமிப்புகளைப் பற்றி மக்கள் அதிகமாகப் பேசிக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் இந்தப் படம் வெளிவருவது பொருத்தமாக இருக்கம் என்கிறது ‘அஞ்சல’ படக்குழு.

இந்தப் படத்தை இந்த மாதம் 24ம் தேதி ஆரா சினிமாஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

Read Previous

Thangamagan – Official Trailer

Read Next

ரஜினியை விட கமல் 5 லட்சம் அதிகம் !

Most Popular