‘பீப் சாங்’ என் பாட்டே இல்லை – அனிருத் அலறல்

சிம்பு, அனிருத் இருவரும் இணைந்து உருவாக்கியதாகச் சொல்லப்பட்ட ‘பீப் சாங்’ என்ற ஆபாசாப் பாடலுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

மாதர் சங்கங்கள் புகார் அளித்துள்ளதன் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

அந்தப் பாடலை தானும், அனிருத்தும் இணைந்துதான் உருவாக்கினோம். இப்படி எங்களிடம் 150 பாடல்கள் உள்ளன, அதில் ஒன்றை யாரோ திருடி வெளியிட்டுவிட்டார்கள் என்று சிம்பு சில பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

இசை நிகழ்ச்சிக்காக கனடாவிற்குச் சென்றிருந்த அனிருத் இந்த சர்ச்சை குறித்து சற்று முன் டிவிட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

“தமிழ்நாட்டு மக்களுக்கு சமர்ப்பணம் செய்வதற்காக டொரன்டோ இசை நிகழ்ச்சிக்காக நான் முழுமையாக ஈடுபட்டிருந்தேன்.

‘பீப் சாங்’ பற்றி என்னுடைய நிலையைத் தெரிவிக்க விரும்புகிறேன். அந்தப் பாடல் என்னுடைய இசையிலோ, என்னுடைய எழுத்திலோ நான் பாடியோ உருவாகவில்லை.

எனக்கு ஆச்சரியமூட்டும் வகையில் இந்த சர்ச்சையில் எதிர்பாராத விதமாக என்னையும் இழுத்திருக்கிறார்கள்.

எனக்குப் பெண்கள் மீது மிகுந்த மரியாதை உள்ளது, அது என்னுடைய சொந்த இசையமைப்பில் உருவான பாடல்களில் தெளிவாகத் தெரியும்.

இது சம்பந்தமான எல்லா விதமான சிந்தனைகளுக்கும் இந்த விரும்பத்தகாத நிலைமையில் ஆழ்ந்த வருத்தத்துடன் முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன்,” என அனிருத் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று சிம்பு, நானும் அனிருத்தும் இணைந்துதான் அந்தப் பாடலை உருவாக்கினோம் என்று சொல்லியுள்ள சூழ்நிலையில் தற்போது அனிருத் அந்தப் பாடலில் என் பங்கு எதுவுமில்லை என்று சொல்லியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது.

நிலைமை மிகவும் தீவிரமடைவதைத் தொடர்ந்தே அனிருத் இப்படி ஒரு கருத்தைத் தெரிவித்திருக்க வேண்டும்.

அனிருத்தின் இந்தக் கருத்துக்கு சிம்பு மறுப்பு சொல்லப் போகிறாரா அல்லது, மீண்டும் ஒரு புதிய சர்ச்சையைக் கிளப்பப் போகிறாரா….?

Read Previous

தத்தெடுப்பு – மணிரத்னத்தின் மணியான முயற்சி

Read Next

மீண்டு வருகிறதா ‘மருதநாயகம்’ ?

Most Popular