மீண்டு வருகிறதா ‘மருதநாயகம்’ ?

கமல்ஹாசன் இயக்கம், நடிப்பில் 1997ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு அதன் பின் அப்படியே கிடப்பில் போடப்பட்ட படமான ‘மருத நாயகம்’ படம் மீண்டும் உயிர் வரப் போகிறது என கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒரு தகவல் வெளியானது.

லண்டனைச் சேர்ந்த ஒரு பெரும் தொழிலதிபர் அந்தப் படத்தைத் தயாரிக்க முன் வந்ததாக கமல்ஹாசனே கடந்த வருடம் தெரிவித்திருந்தார்.

அதற்கான அடுத்த நகர்வு இப்போதுதான் மீண்டும் ஆரம்பமாகியுள்ளதாகத் தெரிகிறது.

‘கத்தி’ படத்தைத் தயாரித்த, ‘நானும் ரௌடிதான்’ படத்தை வெளியிட்ட, ரஜினிகாந்த் நடிக்க உள்ள ‘எந்திரன் 2’ படத்தைத் தயாரிக்க உள்ள லைக்கா புரொடக்சன்ஸ் ‘மருதநாயகம்’ படத்தையும் தயாரிக்க உள்ளதோ என சந்தேகம் எழுந்துள்ளது.

அந் நிறுவனத்தின் நட்பு நிறுவனமான ஐங்கரன் நிறுவனத்தின் டிவிட்டரில் ‘மருதநாயகம்’ படத்தின் போஸ்டரை மட்டும் திடீரென சற்று முன்னர் வெளியிட்டிருக்கிறார்கள்.

ஆனால், அதில் வேறு எந்த நிலைத் தகவலும் இல்லை. விரைவில் ‘மருதநாயகம்’ படம் மீண்டும் உருவாவது பற்றிய அறிவிப்பு வர வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவே தெரிகிறது.

 

Read Previous

‘பீப் சாங்’ என் பாட்டே இல்லை – அனிருத் அலறல்

Read Next

சிம்பு, அனிருத்துக்கு கோவை போலீசார் சம்மன்