தமிழ்த் திரையுலக ரசிகர்களால் எப்போது ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட படம் ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகம்.
கடந்த சில மாதங்களாகவே இப்படத்தின் முன் தயாரிப்புப் பணிகளில் ஷங்கர் ஈடுபட்டு வந்தார். ஆனால், படப்பிடிப்பு எப்போது ஆரம்பமாகும் என்பது சஸ்பென்சாகவே இருந்து வந்தது.
ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதி இப்படம் ஆரம்பமாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால், தமிழக மக்கள் வெள்ளத்தில் தவித்துக் கொண்டிருந்த சூழ்நிலையில் படத்தை அன்றைய தினத்தில் ஆரம்பிப்பது சரியாக இருக்காது என்று நேற்று படத்தை ஆரம்பித்துவிட்டார்கள்.
படத்தின் தலைப்பு ‘எந்திரன் 2’ என்றுதான் இதுநாள் வரை அனைவரும் எழுதி வந்தார்கள். ஆனால், படத்தின் தலைப்பு ‘2.0’ மட்டும்தானாம். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்களில் அடுத்தடுத்த வெர்ஷன்களை 2, 2.5, 3 என்று குறிப்பிடுவதுதான் வழக்கம்.
அதே பாணியின் ஷங்கர் ‘எந்திரன்’ இரண்டாம் பாகத்திற்கும் ‘2.0’ என்ற வித்தியாசமான தலைப்பை வைத்திருக்கிறார்.