‘எந்திரன் 2’ – தமிழுக்கு வந்த அக்ஷய் குமார்

‘எந்திரன் 2’ படத்தில் ஆர்னால்ட் நடிக்கப் போகிறார், ஆமீர் கான் நடிக்கப் போகிறார் என்றெல்லாம் வந்த செய்திகளுக்கு இன்று முற்றுப் புள்ளி வைத்துவிட்டார்கள்.

படத்தில் ரஜினிக்கு இணையான ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் அக்ஷய் குமார்.

‘எந்திரன் 2’ படத்திற்கான அதிகாரப்பூர்வமான பத்திரிகைச் செய்தியில் அப்படித்தான் குறிப்பிட்டுள்ளார்கள். அதனால் அவரை படத்தின் வில்லன் என்று சொல்வதும் தவறுதான்.

ரஜினிகாந்தின் ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி படத் தொகுப்பையும், ரசூல் பூக்குட்டி ஒலி அமைப்பையும் கவனித்துக் கொள்கிறார்கள்.

இந்தப் படத்திற்காக ஹாலிவுட் கலைஞர்களும் பங்கு பெறுகிறார்கள். எஃபெக்ட்ஸ்களை ‘ஜுராசிக் பார்க், அயர்ன் மேன், அவன்ஜர்ஸ்’ படங்களை செய்த ஹாலிவுட்டின் நம்பர் 1 கம்பெனியான லீகசி எபெக்ட்ஸ் செய்யவிருக்கிறார்கள்.

டிரான், வாட்ச் மேன் படங்களுக்கு ஆடை வடிவமைப்பைச் செய்த மேரி ஈ.வோக்ட், ‘எந்திரன் 2’ படத்திற்கு சிறப்பு ஆடை வடிவமைப்பைச் செய்கிறார்கள்.

‘டிரான்ஸ்பார்மர்’ புகழ் ஆக்ஷன் இயக்குனர் கென்னி பேட்ஸ், ‘லைப் ஆப் பை’ புகழ் விஎப்எக்ஸ் ஜான் யூக்ஸ், வால்ட் ஆகியோர் செய்கிறார்கள்.

அரங்க அமைப்பு – முத்துராஜ், விஎப்எக்ஸ் சூபர்வைசர் – ஸ்ரீனிவாஸ் மோகன், வசனம் – ஜெயமோகன். ஷங்கருடன் முதன் முறையாக எழுத்தாளர் ஜெயமோகன் பணியாற்றுகிறார்.

3டியிலும் இப்படம் உருவாகிறது.

லைக்கா புரொடக்சன்ஸ் சார்பாக சுபாஸ்கரன் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

‘எந்திரன்’ படத்தின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் ரஜினியும், ஷங்கரும் இணையும் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகிவிட்டது.

 

Read Previous

Amy Jackson on a roll

Read Next

‘எந்திரன் 2’ அல்ல ‘2.0’ மட்டுமே…