‘மானிடன்’ என்ன சொல்ல வருகிறார் ?

ஏ.எஸ்.எஸ். மூவீஸ் சார்பில் அசோக்குமார் தயாரிக்க ஒய்.முனிஷ் இயக்கும் படம் ‘மானிடம்’.

‘திருட்டு ரயில்’ படத்தில் நாயகனாக நடித்த ரக்‌ஷன் நாயகனாக நடிக்க அட்சயப் பிரியா நாயகியாக அறிமுகமாகிறார்.

சீதா, விஜயகுமார், பாவா லெட்சுமணன், ‘கதகளி’யில் வில்லனாக நடித்த ஆத்மா, ரங்கம்மாள் பாட்டி ஆகியோருடன் தயாரிப்பாளர் அசோக்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் .

‘மானிடன்’ என்ன சொல்ல வருகிறார் என்பது பற்றி இயக்குனர் ஒய். முனீஷ் கூறியதாவது,

“காதல் சார்ந்த பல படங்களை இந்த சினிமா பார்த்துவிட்டது. சண்டை, காமெடி, சென்டிமென்ட் என ஒவ்வொரு டிரென்டிலும் மக்களுக்குப் பிடிக்கிற படங்களை பின் தொடர்ந்து பத்து, இருபது படங்கள் அதே மாதிரி வருவதும் வாடிக்கையாகிவிட்டது.

இப்போது பேய் பட டிரென்ட் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால், இந்த வரிசைகளை எல்லாம் நகர்த்தி வைத்துவிட்டு வேறு ஒரு கோணத்தை நோக்கி அடியெடுத்து வைக்கிற படம்தான் ‘மானிடன்’.

2016ல் நமக்கான தேவைகள் முழுதாக நிரம்பியிருக்கிறதா ?. வருடங்காலத்திலும் இப்படியே இருக்குமா ?, என்ற மிகப் பெரிய கேள்விக்குறி நம் எதிரில் நிற்கிறது. அதைக் குறித்து கவலைப்படும் அல்லது சிந்திக்கும் மனிதர்களை கொஞ்சம் நின்று நிதானித்து செயல்பட வைக்கும் படம்தான் ‘மானிடன்’, என்கிறார் இயக்குனர்.

ஊத்துக்கோட்டை, சுருட்டப்பள்ளி, சாலக்குடி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. தமிழக ஆந்திர எல்லையில் உள்ள சுருட்டப்பள்ளியில் இதுவரை எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, என்.டி.ராமராவ் மூவரும் தான் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். அவர்கள் மூன்று பேருமே முதல்வராகி விட்டனர். நான்காவது படமாக அங்கு படப்பிடிப்பு நடக்கும் படம் தான் ‘மானிடன்’.

படத்துக்கு முந்தைய பணியான கதை, திரைக்கதை அமைக்கவே ஓராண்டு செலவிட்டுள்ளனர் . படத்துக்கு ராம்ஜி இசையமைக்கிறார். 3 பாடல்கள் பதிவாகிவிட்டன. ஒரு கானா பாடலும் உண்டு.

ஒளிப்பதிவு செந்தில்குமார். இவர் ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவின் உதவியாளர். நடனம்–சதிஷ் குமார். சண்டைப் பயிற்சி – ராஜேஷ் கண்ணன். இவர் பெப்ஸி விஜயனின் உதவியாளர்

வருகிற 22ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்குகிறது. 40 நாட்களில் முழுப்படத்தையும் முடிக்கும் முனைப்போடு களம் இறங்கியிருக்கிறார்கள்.

Read Previous

துணிச்சலான கதையுடன் ‘வெண்ணிலாவின் அரங்கேற்றம்’

Read Next

What is Varalaxmi’s next ?

Most Popular