இளையராஜாவின் இசையில் வெளிவந்த 1000மாவது படம் என்ற சிறப்பைப் பெற்ற படம் ‘தாரை தப்பட்டை’.
பாலாவின் இயக்கத்தில் அவருடைய சிஷ்யரான சசிகுமார் தயாரித்து நாயகனாக நடித்த படம்.
வியாபார ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை இந்தப் படம் பெறவில்லை.
எதிர்பார்த்து வந்த ரசிகர்களை பாலா ஏமாற்றிவிட்டார் என்றே பெரும்பாலான விமர்சனங்கள் வெளிவந்தன.
இதனிடையே சமீபத்திய பேட்டி ஒன்றில் ‘தாரை தப்பட்டை’ படம் குறித்து சசிகுமார் மனம் திறந்து பேசியுள்ளார்.
எனது குருவுக்காக எதை வேண்டுமானாலும் இழக்கவும் நான் தயாராக இருக்கிறேன். என் குருவுக்காக எவ்வளவு கொடுக்கவும், எவ்வளவு இழக்கவும் நான் தயாரா இருக்கிறேன். என் குரு மீதான அன்பு, அது எல்லாவற்றையும் விடப் பெரியது என ‘தாரை தப்பட்டை’ படத்திற்காக நஷ்டப்பட்டது பண ரீதியாகப் பெரிய விஷயமில்லை என்று கூறியிருக்கிறார்.
கோடிகளை இழந்தாலும் குரு மீதான அன்பில் சசிகுமார் போல ஒரு சிஷ்யரைப் பார்க்க முடியுமா ?….