தமிழ்த் திரையுலகில் தரமற்ற படமாக கடந்த வருடம் வெளிவந்த ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தில் முதல் முறையாக ஜி.வி.பிரகாஷ்குமாரும், ஆனந்தியும் ஜோடி சேர்ந்தனர்.
அந்தப் படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் என்னை ஏமாற்றி அப்படி ஒரு மோசனமான படத்தில் நடிக்க வைத்துவிட்டார் என ஆனந்தி அதன் பிறகு பேசினார். இனி ஆதிக் இயக்கத்தில் நடிக்க மாட்டேன் என்றும் சொன்னார்.
ஆனால், ஜி.வி.பிரகாஷுடன் நடிக்க மாட்டேன் என்று அவர் சொல்லவில்லை. ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தைத் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் – ஆனந்தி மீண்டும் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
மூன்றாவது முறையாக இருவரும் ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர். இப்படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமானவர் அவிகா கோர். சில பிரச்சனைகளால் இப்போது அவரை படத்தில் இருந்து நீக்கியுள்ளனர். அவருக்குப் பதில்தான் ஆனந்தி நடிக்கப் போகிறார்.
இப்படத்தில் இன்னொரு நாயகியாக நிக்கி கல்ரானி நடித்து வருகிறார்.