சசிகுமார், விஜய் ஆண்டனி படங்களைத் தயாரிக்கும் நிறுவனம்

செந்தூர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி.டி. ராஜா ஒரே சமயத்தில் இரண்டு படங்களைத் தயாரிக்கிறார்.

ஒரு படத்தில் சசிகுமார் கதாநாயகனாகவும், மற்றொரு படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாகவும் நடிக்கிறார்கள்.

சசிகுமார், நிக்கி கல்ரானி, நாயகன் நாயகியாக நடிக்க ராதாரவி, தம்பி ராமையா, விஜயகுமார், ரேகா, சுமித்ரா, சதிஷ், மனோபாலா, ரமேஷ் கண்ணா, சிங்கம் புலி, நிரோஷா, யோகி பாபு உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்தப் படத்தை சுந்தர் .சி-யிடம் உதவி இயக்குனராக இருந்த கதிர்வேலு இயக்குகிறார். இப்படத்தில் ஐ.டி. கம்பெனியில் வேலை செய்பவராக சசிகுமார் நடிக்கிறார். சாம் சிஎஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பொள்ளாச்சியில் நடந்து வருகிறது.

இந்தப் படத்தையடுத்து செந்தூர் பிலிம்ஸ் நிறுவனம் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் படத்தையும் தயாரிக்கிறது.

இப்படத்தை ‘மெட்ரோ’ படத்தை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் இயக்குகிறார். ஜோஹன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

மற்ற நடிகர்கள், நடிகைகள் விவரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

Read Previous

யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படம்

Read Next

தேவ் – டாய் மச்சான்…பாடல் வீடியோ…

Most Popular