ஹங்ரி உல்ப் என்டர்டெயின்மென்ட் மற்றும் புரொடக்ஷன்ஸ் எல்எல்பி தயாரிக்கும் புதிய படம் இன்று ஆரம்பமானது.
இந்தப் படத்தில் பாலய்யா என்ற இயக்குனர் அறிமுகமாகிறார். இவர் ஒரு சில குறும்படங்கள் இயக்கியிருப்பதோடு, CSK மற்றும் நடுவன் போன்ற திரைப்படங்களில் துணை இயக்குனராகவும், இணை இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார். இந்தப் படம் ‘டார்க் காமெடி த்ரில்லர்’ ஆக உருவாக உள்ளது.
யோகி பாபு, முனிஷ்காந்த் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். மேலும் சில பிரபல நடிகர்களும் நடிக்க உள்ளார்கள்.
ஷமந்த் இசையமைக்க, ஏ விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி இயக்குனர் பாலய்யா கூறுகையில்,
“இயக்குனராக அறிமுகமாகும் எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்கள் விஜே கார்த்திக் மற்றும் சக்தி வெங்கட்ராமன் ஆகியோருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். தமிழ் சினிமாவில் இயக்குனர் கனவோடு வருபவர்களுக்கு வாய்ப்பளிக்கும் இந்த மாதிரி தயாரிப்பாளர்களை பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது,” என்கிறார் இயக்குனர் பாலய்யா.
மார்ச் மாத இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.