தெலுங்குத் திரையுலகின் இளம் சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபு விரைவில் நேரடித் தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்கப் போகிறார்.
இந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ளார். இந்தப் படத்திற்காக பாலிவுட் ஹீரோயின் பரீணிதி சோப்ராவை ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகேஷ்பாபு நடித்து கடைசியாக வெளிவந்த ‘பிரம்மோற்சவம்’ படம் படுதோல்வி அடைந்தது. அதனால், தன்னுடைய அடுத்த படம் மிகச் சிறப்பாக வரவேண்டும் என மகேஷ்பாபு முடிவு செய்திருந்தார்.
அதற்காக இயக்குனர் முருகதாஸையும் கதையைப் பொறுமையாகத் தயார் செய்யும்படி கேட்டுக் கொண்டிருந்தார்.
முருகதாஸ் தற்போது ஹிந்தியில் ‘அகிரா’ படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது.
முருகதாஸ் இயக்க உள்ள படத்தில் மகேஷ்பாபு ராணுவ அதிகாரியாக நடிக்க உள்ளார் எனத் தெரிகிறது.
மகேஷ்பாபுவின் தமிழ் வரவு இங்குள்ள முன்னணி ஹீரோக்களுக்கு கொஞ்சம் கலக்கத்தை உண்டு பண்ணியிருக்கிறதாம்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஜுலை மாதம் 29ம் தேதி ஆரம்பமாக உள்ளது.