சிவகார்த்திகேயன் படத்திற்கு யுவனின் இசைப் பயணம்

‘இரும்புத் திரை’ படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் அடுத்து சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்குகிறார். கல்யாணி பிரியதர்ஷன், இவானா மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்திற்குப் பிறகு யுவன் இசையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் இது.

இப்படத்தின் பாடல் சேர்க்கைக்காக இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா, இயக்குனர் மித்ரன் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளார்கள்.

இன்று காலையில்தான் இப்படம் பற்றிய ஒரு அப்டேட் ஆக ‘நாச்சியார்’ படத்தில் நடித்த இவானா ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று அறிவித்தார்கள்.

அடுத்து, பாடல் சேர்க்கை பயணம் பற்றிய அறிவிப்பை இயக்குனரும், இசையமைப்பாளரும் வெளியிட்டுள்ளார்கள்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு யுவன், சிவகார்த்திகேயன் கூட்டணி இந்தப் படத்தில் இணைவதால் ரசிகர்களிடம் இப்படத்திற்கு இசை ரீதியாகவும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Read Previous

சினிமாவில் வாரிசு இருக்கலாமா ? கமல்ஹாசனுக்கு கேள்வி

Read Next

எங் மங் சங் – சண்டைக் காட்சிகள் சீனாவில் படமாக்கம்

Most Popular