எங் மங் சங் – சண்டைக் காட்சிகள் சீனாவில் படமாக்கம்

வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் பட நிறுவனம் சார்பாக கே.எஸ்.சீனிவாசன் கே.எஸ் .சிவராமன் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் ‘எங் மங் சங்’.

இந்த படத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்கிறார்.

மற்றும் தங்கர்பச்சான், ஆர்.ஜே.பாலாஜி, சித்ரா லட்சுமனன், கும்கி அஸ்வின், காளிவெங்கட், முனீஸ்காந்த், மாரிமுத்து, வித்யா இவர்களுடன் பாகுபலி வில்லன் பிரபாகர் வில்லனாக நடிக்கிறார்.

கதை, திரைக்கதை, வசனம், எழுதி அர்ஜுன் எம்எஸ் இயக்குகிறார்.

கும்பகோணம், பொள்ளாச்சி ஆகிய இடங்களைத் தொடர்ந்து ஆந்திரா, கர்நாடகா போன்ற இடங்களில் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளார்கள்.

அதைத் தொடர்ந்து சீனாவில் டெங் லெங் என்ற இடத்தில் அதிக செலவில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்தினார்கள்.

பிரபுதேவா வில்லன்லளுடன் மோதும் சண்டைக் காட்சிகளை சில்வா அமைக்க படமாக்கப்பட்டது.

குங்பூ மற்றும் சைனீஸ் ஸ்டண்ட் பற்றிய காட்சிகள் கொண்ட படம் என்பதால் அதிக கவனத்துடன் படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

1980 கால கட்டத்தில் நடப்பது மாதிரியான கதைக் களத்தைக் கொண்ட படமாக ‘எங் மங் சங்’ உருவாகி வருகிறது.

Read Previous

சிவகார்த்திகேயன் படத்திற்கு யுவனின் இசைப் பயணம்

Read Next

தமிழரசன் – விஜய் ஆண்டனி ஜோடியாக ரம்யா நம்பீசன்

Most Popular