தமிழரசன் – விஜய் ஆண்டனி ஜோடியாக ரம்யா நம்பீசன்

எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் ‘தமிழரசன்’.

இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்க, அவருடைய ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சோனு சூட் வில்லனாக நடிக்கிறார். மற்றும் பூமிகா, யோகிபாபு, ரோபோ சங்கர், முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி பாபு யோகேஸ்வரன் இயக்குகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு 15 நாட்கள் சென்னையில் நடைபெற்றது.

விஜய் ஆண்டனி – ரம்யா நம்பீசன் சம்மந்தப் பட்ட காட்சிகள் மற்றும் விஜய் ஆண்டனி வில்லன் சோனு சூட் உடன் மோதும் ஆக்‌ஷன் காட்சிகள் படமானது.

அத்துடன் 1000 கல்லூரி மாணவர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டக் காட்சிகளை 4 காமிராக்களைக் கொண்டு ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு மிகப் பிரமாண்டமான முறையில் படமாக்கினார். இந்த காட்சிகள் திரையில் மிகப் பெரிய பிரமிப்பை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.

தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

Read Previous

எங் மங் சங் – சண்டைக் காட்சிகள் சீனாவில் படமாக்கம்

Read Next

மாயநதி – காதலைக் கடந்தாரா கதாநாயகி ?