விஜய் டிவியிலிருந்து சிவகார்த்திகேயன், மகாபா ஆனந்த் ஆகியோர் ஹீரோவாக மாறி இருக்கிறார்கள். அந்த வரிசையில் இப்போது சன்டிவியில் விஜேவாக இருந்த சஞ்சய் ‘மியாவ்’ படத்தில் நான்கு ஹீரோக்களில் ஒருவராக அறிமுகமாக சினிமாவிற்கு வந்துள்ளார்.
ஹோட்டல் மானேஜ்மென்ட் முடித்துவிட்டு, சன் டிவியில் விஜ-வாகி அதன் பின் சினிமாவிற்கு வந்துள்ளார் சஞ்சய்.
“எனக்கு சின்ன வயசுலேர்ந்தே சினிமால நடிக்கணும்னுதான் ஆசை. ஆனா படிச்சது ஹோட்டல் மேனேஜ்மெண்ட். முடிச்சுட்டு செஃப்பா வேலை பார்த்துட்டு இருந்தப்ப நடிக்க சான்ஸ் கேட்டு ஒவ்வொரு ஆபிஸா ஏறி இறங்கினேன். நான்கு ஆண்டுகள் அப்படியே போனது. எந்த வழியில உள்ளே போறதுனு தெரியாம சேனல்ல ட்ரை பண்ணலாம்னு அந்த முயற்சிகள்ல ஈடுபட்டேன். சன் டிவி ஆடிஷன்ல கலந்துகிட்டேன். அதுலயும் 14 வது முறை தான் செலக்ட் ஆனேன். இன்னும் மூன்று முறை போயிருந்தா கஜினி முஹமதுவாகியிருப்பேன். அந்த விஜேங்கற அடையாளம் தான் எனக்கு இந்த பட சான்ஸ் கொடுத்தது.
‘மியாவ் படத்துல நான்கு பேரை அடிப்படையா வெச்சு தான் கதையே நகரும். நடிக்க போன போதே நான்கு பேருக்குமே சமமான கேரக்டர்னு சொல்லிட்டாங்க. கதையில முக்கியமான திருப்பமே என்னோட கேரக்டர்லேருந்துதான்.
‘மியாவ்’ படத்தை தியேட்டர்ல பார்க்கிற ஆடியன்ஸுக்கு ரொம்ப வித்தியாசமான அனுபவமா இருக்கும். பூனைங்கறது எல்லா வீட்டுலயும் செல்லமா வளர்க்கப்படற பிராணிதான். அதனால ஆடியன்ஸ் ஈஸியா படத்துடன் கனெக்ட் ஆகிடுவாங்க. உண்மையான பூனைக்கும் கிராபிக்ஸ் பூனைக்கும் உங்களுக்கு வித்தியாசம் தெரியாது. எல்லோருக்குமான படமா நல்ல எண்டெர்டய்னரா அமையும்.
அடுத்து, சில படங்கள்ல பேசிக்கிட்டு இருக்கேன். லீட் ரோல்ஸ் பண்ணனும். இல்லைன்னா பெரிய ஹீரோக்கள் படங்கள்ல சப்போர்டிவ் ரோல் பண்ணனும். மியாவ் படத்துக்கு முன்னாடியே நிறைய ஆடிஷன் போயிருக்கேன். ஆனா கேரக்டர் எதுவும் பிடிக்காம திரும்பிடுவேன். பிடிச்ச கேரக்டர் தான் பண்ணனும்னு உறுதியா இருக்கேன்,” என்கிறார் சஞ்சய்.