29வது டோக்கியோ பட விழாவில் ‘இறுதிச் சுற்று’

ஒய் நாட் ஸ்டுடியோஸ், திருக்குமரன் என்டெர்டெயின்மென்ட், யு டிவி மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்து இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளிவந்த படம் ‘இறுதிச் சுற்று’.

சுதா கொங்காரா இயக்கத்தில் மாதவன், ரித்திகா சிங், நாசர் மற்றும் பலர் நடித்த இந்தப் படம் மாறுபட்ட திரைப்படமாக அமைந்து ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற வெற்றிப் படமாக அமைந்தது.

இப்படம் டோக்கியோவில் நடைபெற உள்ள 29வது சர்வதேசத் திரைப்பட விழாவில் அக்டோபர் 31, நவம்பர் 1, 2 ஆகிய  மூன்று நாட்களில் திரையிடப்பட உள்ளது.

இது குறித்து படக்குழுவினர் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

 

Read Previous

‘மியாவ்’ சஞ்யய், டிவியிலிருந்து அடுத்த ஹீரோ

Read Next

‘Rekka’ is Vijay Sethupathi’s Ghilli !?