மீண்டும் ஆரம்பமான ‘எனை நோக்கி பாயும் தோட்டா’

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் மற்றும் பலர் நடிக்கும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் சென்னையில் நடைபெற்று வருகிறது.

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் முதன் முறையாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இடையில் கௌதம் மேனன், சிம்பு நடிக்கும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தை முடிக்க வேண்டிய சூழ்நிலை வந்ததால் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் படப்பிடிப்பை தள்ளி வைத்தார்கள்.

அதற்குள் தனுஷ், ‘வட சென்னை’ படத்தில் நடிக்க ஆரம்பித்ததோடு, ‘பவர் பாண்டி’ படத்தையும் இயக்க ஆரம்பித்தார்.

இதனால், 80 சதவீதம் முடிந்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ எப்போது முடிவடையும் என தனுஷ் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள்.

இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே மீதம் உள்ளதாம். அவற்றை முடித்ததும், இறுதிக் கட்டப் பணிகள் ஆரம்பமாகும். அடுத்த ஆண்டு துவக்கத்தில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

Read Previous

No romance with Nayanthara – Karthi

Read Next

கீர்த்தி சுரேஷ் அலை வீசுகிறதா…?

Most Popular