கீர்த்தி சுரேஷ் அலை வீசுகிறதா…?

தமிழ்த் திரையுலகில் 80களில் அறிமுகமாகி சுமார்ன 10 படங்களில் மட்டுமே நடித்த நடிகை மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ்.

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் நாயகியாக இரண்டு படங்களில் நடித்த பின் தமிழில் அறிமுகமானார்.

அறிமுகமான முதல் படமான ‘இது என்ன மாயம்’ தோல்விப் படமாக அமைந்தது. அந்தப் படம் வெளிவருவதற்கு முன்பாகவே ஐந்துக்கும் மேற்பட்ட படங்களில் நடிக்க ஆரம்பித்தவர் கீர்த்தி.

சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்த ‘ரஜினி முருகன்’ படம் மாபெரும் வெற்றியடைய அவரைத் தேடி மீண்டும் வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.

தனுஷ் ஜோடியாக நடித்த ‘தொடரி’ படம் கடந்த மாதம் வெளிவந்து தோல்வியடைந்த நிலையில் மீண்டும் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்த ‘ரெமோ’ படம் அவருக்கு வெற்றியைத் தேடித் தந்தது.

விஜய் ஜோடியாக ‘பைரவா’ படத்தில் நடித்து முடிக்க உள்ளார். அடுத்து சூர்யா ஜோடியாக ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடிக்கப் போகிறார். பாபிசிம்ஹாவுடன் நடித்த ‘பாம்புச் சட்டை’ விரைவில் வெளியாக உள்ளது.

இதனிடையே விஜய் சேதுபதி, விஷால் உள்ளிட்ட நடிகர்களும் கீர்த்தி சுரேஷை தங்கள் படங்களில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.

அவருக்கு ரசிகர் மன்றங்கள் திறக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருவதாகச் சொல்கிறார்கள்.

நயன்தாரா, ஹன்சிகா, தமன்னா ஆகியோரின் அலை கொஞ்சம் கொஞ்சமாக ஓய்ந்து வரும் நிலையில் தமிழ்த் திரையுலகில் தற்போது கீர்த்தி சுரேஷ் அலை வீசுவதாகவே கூறுகிறார்கள்.

Read Previous

மீண்டும் ஆரம்பமான ‘எனை நோக்கி பாயும் தோட்டா’

Read Next

ஏ.ஆர்.முருகதாஸ், மகேஷ்பாபு படத்தின் பெயர் ‘ஏஜென்ட் சிவா’ ?

Most Popular